எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது – கே.சி.வேணுகோபால்

KC Venugopal said that the government woke up only after the speech of our leader Sonia Gandhi.

kcvenukopal

எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறை சம்பவம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள்,  மணிப்பூர் வன்முறை சம்பவம் இந்திய தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் நமது தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயாக உங்கள் வலியை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் மனசாட்சியை நல்ல வழில் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என டெஹ்ரிவித்திருந்தார்.

இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மணிப்பூரின் நிலைமை குறித்து விவாதிக்க, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது மிகவும் தாமதமானது. எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது. இருப்பினும், அமைதிக்கான எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது மணிப்பூரில்தான் நடக்க வேண்டும். டெல்லியில் நடந்தால் இந்த முயற்சி தீவிரம் இல்லாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.