தமிழ் நாடே இந்தியா என்ற நிலை உருவாகும் – ராகுல் காந்தி பேச்சு

Congress leader Rahul Gandhi has said that my relationship with the people of Tamil Nadu is not for political gain.

தமிழக மக்களுடன் என் உறவு அரசியல் ஆதாயம் கொண்டது அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். அதன்படி, இன்று கோவையில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர்,தமிழ் நாடு என்பது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல.தமிழ் நாடே இந்தியா என்ற நிலை உருவாகும்.தமிழக மக்களுடன் என் உறவு அரசியல் ஆதாயம் கொண்டது அல்ல. என் மனதிலிருந்து தோன்றும் ரத்தப்பிணைப்புடன் இணைந்த ஓர் உணர்வு.தமிழர்களின் உரிமைகளை, எதிர்பார்ப்புகளை பாதுகாப்பேன் என்று பேசியுள்ளார்.