#Breaking:பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..!

The Union Cabinet meeting, chaired by Prime Minister Narendra Modi, will be held in the capital of Delhi at 11 am tomorrow

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம்,காணொலி மூலம் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.இருப்பினும்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,கொரோனா தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைநகர் டெல்லியில்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு,மத்திய அமைச்சரவைக் கூட்டமானது காணொலி மூலம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, ,கொரோனா பாதிப்பு நிலவரம்,மேலும்,பிரதமர் மோடி நேற்று அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி விநியோகம்,தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் உள்ளிட்டவைகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.