தமிழ்நாடு சட்டப்பேரவையை பாராட்டிய ஒன்றிய அரசு! முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற சபாநாயகர்..!

The central government has given a certificate of appreciation for the paperless assembly project being implemented in the Tamil Nadu Legislative Assembly.

appavu

தமிழக சட்டப்பேரவையில் செயல்படுத்தப்படும் காகிதமில்லாத சட்டமன்றம் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், காகிதமில்லாத சட்டமன்றம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் செயல்படுத்தப்படும் இந்த காகிதமில்லாத சட்டமன்றம் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில், காகிதமில்லாத சட்டமன்றம் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியதை பாராட்டி ஒன்றிய அரசு வழங்கிய சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாழ்த்துப் பெற்றார்.