தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
தமிழகத்தில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மருத்துவமனைகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
இந்த நிலையில், கொரோனா தடுப்பு ஒத்திகைக்கு பின், சென்னை, சென்ட்ரலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் மாதிரி பயிற்சி நடைபெற உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை. புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை. தனித்தனியாகவே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை என்ற நிலை இல்லை. கொரோனா அதிகமானால், மாஸ்க் அணிவது குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.