கோடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்துவதில் தவறு ஏதும் இல்லை – சரத்குமார்!

Equality People's Party leader Sarath Kumar has said that there is nothing wrong with conducting an inquiry into the Kodanad affair.

கோடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்துவதில் தவறு ஏதும் இல்லை என  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம்  எலந்தங்குடி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் சென்றுள்ளார்.

அந்த நிகழ்வுக்குப் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் குறித்து புகழ வேண்டாம் என அவர் கூறியதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கோடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடத்த கோருவதில் தவறு ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.