முதல்வரின் இந்த 3 வார்த்தைகள் முத்தானது – கே.எஸ்.அழகிரி

இந்த மூன்று வார்த்தைகளும் முதலமைச்சர் சொன்ன முத்தான வார்த்தைகள் என கே.எஸ்.அழகிரி பேட்டி.

இந்த மூன்று வார்த்தைகளும் முதலமைச்சர் சொன்ன முத்தான வார்த்தைகள் என கே.எஸ்.அழகிரி பேட்டி.

ஈரோடு இடைதேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 80% மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக சஞ்சலத்தில் உள்ளது

நாங்கள் கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்துள்ளோம். எங்களை எதிர்த்து நிற்கும் அதிமுக சஞ்சலத்தில் உள்ளனர். அவர்களால் அவர்களது அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. எனவே சஞ்சலத்தில் உள்ள, தன்னம்பிக்கையற்ற கூட்டணியை மக்கள் விரும்ப மாட்டார்கள். எனவே எங்களது கூட்டணியே மகத்தான வெற்றி பெரும்.

முதல்வரின் முத்தான வார்த்தைகள்

மூன்றாவது அணி கூடாது, காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சந்தர்ப்பாவாதத்தை உருவாக்கி விடும். இந்த மூன்று வார்த்தைகளும் முதலமைச்சர் சொன்ன முத்தான வார்த்தைகள் என தெரிவித்துள்ளார்.