இன்று கலைஞர் அரங்கில் “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி” நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவலாயத்திலுள்ள கலைஞர் அரங்கில் “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழா மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக எம்எல்ஏ எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவலாயத்திலுள்ள கலைஞர் அரங்கில், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வாழ்த்துரை கொண்ட இந்நூலினை, கழக இளைஞர் அணிச் செயலாளர், இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட, மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
அவ்வமயம், நக்கீரன் ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால் அவர்களும், திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர். நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னணியினர் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.