இது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் – ஜி.கே.வாசன்

GK Vasan tweeted that the Tamil Nadu government should not be patient anymore and take concrete steps to get proper Cauvery water to Tamil Nadu.

GK Vasan

தமிழக அரசு இனியும் பொறுமை காக்காமல் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர உறுதியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என ஜி.கே.வாசன் ட்வீட்.

கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார். அதில், கர்நாடகா அரசின் நீர் பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தமிழக அரசுடன் பேசுவது நடத்த வேண்டும் என்றும் நதிநீர் பங்கீடு குறித்து புதிய தீர்ப்பாயத்தை உருவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜூ.கே.வாசன் அவர்கள்   ‘கர்நாடகாதுணை முதல்வர் மேகதாதுஅணை கட்டுவது குறித்தும், காவிரிநீரை தருவது குறித்தும் முரண்பாடாக பேசுவது  தமிழக விவசாயிகளின்வயிற்றில் அடிக்கும் செயல் என்பதால் தமிழக அரசு இனியும் பொறுமை காக்காமல் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர உறுதியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.’ என ட்வீட் செய்துள்ளார்.

unknown node
இது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் – ஜி.கே.வாசன்