பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்கிரபுத்தி கொண்டவர்கள் – புதுச்சேரி முன்னாள் முதல்வர்

பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்கிரபுத்தி கொண்டவர்கள் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்.

பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்கிரபுத்தி கொண்டவர்கள் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்.

புதுச்சேரி முன்னாள் முதலவர் நாராயணசாமி அவர்கள், பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலையாளிகளை அவரது குடும்பத்தார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றும், பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது தங்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும், முன்னாள் பிரதமரை கொன்றவர்கள்  விடுதலையை கொண்டாடுவது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் அவரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனை கண்டுபிடித்து வரவேற்றது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.