பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது- அண்ணாமலை பேச்சு.!

பாஜக இனி கூண்டுக்குள் இருந்து பறக்கும் நேரம் வந்துவிட்டது என கோவில்பட்டியில் அண்ணாமலை பேச்சு.

பாஜக இனி கூண்டுக்குள் இருந்து பறக்கும் நேரம் வந்துவிட்டது என கோவில்பட்டியில் அண்ணாமலை பேச்சு.

கோவில்பட்டியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதில் உரையாற்றிய, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் நேர்மையான புதிய பாதையில் பயணம் செய்ய நாம் தயாராக வேண்டும்.

மோடியின் சாதனைகளை வைத்து ஓட்டு கேட்க வேண்டும், எந்த தமிழரும் வாக்களிக்க மாட்டேன் என்று சொல்லப்போவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் கூண்டுக்குள் இருந்து பறக்கும் நேரம் வந்துவிட்டது, 30 ஆண்டுகளாக கூண்டுக்குள் இருந்துவிட்ட கிளி பறக்கும் நிலை வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன்.

பாஜக தமிழகத்தில் வலிமை அடைந்துவிட்டது, தற்போது களம் மாறிவிட்டதாகவும் அதனை ஒவ்வொரு சாமானியரின் கண்களில் பார்க்கமுடிவதாகவும் அண்ணாமலை மேலும் தெரிவித்துளளார்.