தமிழகத்தில் தற்போது வரை ஊரடங்கை மீறியதாக 4,54,016 பேர் கைது – தமிழக காவல்துறை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது இந்த முழு  ஊரடங்கை சில விஷமிகள் மதிக்காமல் வெளியே சுற்றி திரிந்தனர். அவர்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது இந்த முழு  ஊரடங்கை சில விஷமிகள் மதிக்காமல் வெளியே சுற்றி திரிந்தனர். அவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக கைது செய்தனர். அந்த வகையில்,

தற்போது வரை 4,54,016 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சீர்மிகு  தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,434 பேர் ஊரடங்கை மீறியதாக கைது   செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஊரடங்கை மீறியதாக 3,75,792 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,993 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது.

இதுவரை 4,28,015 வழக்குகளும், ரூ.4,91,79,379  கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5240 வழக்குகளும், ரூ.5,05,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு  வருகிறது.

கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின்  ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.