#BREAKING: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு..!

The Group 1 primary examination scheduled to be held on May 28, 29 and 30 has been postponed.

மே, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு அரசால் முழு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. அதன்படி ,

மே, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 6-இல் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணி பதவிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 5-இல் நடக்கவிருந்த ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

unknown node