ஆளுநர் பதவியை ரத்து செய்ய, சிபிஐ உறுப்பினர் நாடாளுமன்றத்தில் தீர்மானம்.!

ஆளுநர் பதவியை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்றத்தில் பினோய் விஸ்வம் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார்.

ஆளுநர் பதவியை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்றத்தில் பினோய் விஸ்வம் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார்.

கேரளாவைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம், நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். கேரள சிபிஐ உறுப்பினர் பினோய் விஸ்வம், கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தில் ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.<

unknown node

பாஜக ஆட்சிசெய்யாத மாநிலங்களில் முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவிவருகிறது, சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார், பாஜக ஆட்சிசெய்யாத மற்ற மாநில முதல்வர்களுக்கும் அவர் இது தொடர்பாக ஆளுநர்களுக்கு மசோதாக்களை நிரைவேற்ற காலநிர்ணயம் விதிக்கக்கோர வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் முதல்வர் ஸ்டாலினின் இந்த முயற்ச்க்கு ஆதரவு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிஃப் கானுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிபிஐ உறுப்பினர் பினோய் விஸ்வம், நாடாளுமன்றத்தில் ஆளுநர் பதவியை ரத்து செய்யக்கோரி தனிநபர் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார்.