#BREAKING: இன்றும், நாளையும் டாஸ்மாக் மாலை 6 மணி வரை செயல்படும்..!

Tasmac management announced that Tasmac will be operational until 6 pm today and tomorrow

இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும், கொரோனா அதிகரித்து கொண்டே செல்வதால் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை போல தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால், தமிழகத்தில் வருகின்ற 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று வரை டாஸ்மாக்  கடை காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: இன்றும், நாளையும் டாஸ்மாக் மாலை 6 மணி வரை செயல்படும்..!