இன்று இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்கிறார் சுக்வீந்தர் சிங்..!

இன்று காலை 11 மணிக்கு இமாச்சல் முதல்வராக சுக்வீந்தர் சிங்  பதவி ஏற்க உள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு இமாச்சல் முதல்வராக சுக்வீந்தர் சிங்  பதவி ஏற்க உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாஜகவும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர  போட்டியில் ஈடுபட்ட நிலையில், அதன்படி காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு சுக்வீந்தர் சிங்  முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, முகேஷ் அக்னி ஹோத்ரி துணை முதல்வராக பதவியேற்க  உள்ளார்.