மகளிர் உரிமைத்தொகைக்கு டோக்கன் வழங்கப்படும் – ராதாகிருஷ்ணன் பேட்டி

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும் என ராதாகிருஷ்ணன் பேட்டி.

Radhakrishnan

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும் என ராதாகிருஷ்ணன் பேட்டி.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ருபாய் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்  செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மகளிர் உரிமை தொகையை பெறுவதர்க்கான யாரெல்லாம் அத்தகுதியானவர்கள் என்பது தொடர்பான அறிவிப்புகளும் வெளியானது.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாள் ஒன்றுக்கு 50 குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.

500 குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படுவர்.குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும் என டெஹ்ரிவித்துள்ளார்.