பழங்குடி இனத்தை சேர்ந்தவர் முகத்தில் சிறுநீர் கழித்து விவகாரம் – ரூ.5 லட்சம் நிவாரணம்...!

Rs 5 lakh relief to a tribal person in case of urinating on his face.

urinationissue

பழங்குடி இனத்தை சேர்ந்தவர் முகத்தில் சிறுநீர் கழித்து விவகாரத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த நபருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பாஜக தலைவர் பிரவேஷ் சுக்லா, போதையில் பழங்குடியினரின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அவரது வீட்டையும் அதிகாரிகள் புல்டோசர்கள் மூலம் இடித்தனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தஷ்ரத் ராவத்தை தனது இல்லத்திற்கு அழைத்து பேசிய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவருடைய கால்களை கழுவி மரியாதை செலுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, பழங்குடி இனத்தை சேர்ந்த அந்த நபருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், வீடு கட்டிக்கொள்ள மேலும் ரூ.1.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.