பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சருடன் உத்தர பிரதேச முதல்வர் சந்திப்பு!

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has met BJP leader JB Natta and Union Home Minister Amit Shah.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து நேற்று பேசியுள்ளார்.

ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், உத்தர பிரதேசத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் இல்லத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் பொழுது உத்திரபிரதேசத்தில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து  விவாதித்துள்ளனர்.