#BREAKING: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து – முதல்வர் அவசர ஆலோசனை..!

Tamil Nadu Chief Minister MK Stalin is in urgent consultation regarding the appeal of the Madurai branch judgment of the High Court.

உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை மேல்முறையீடு செய்வது குறித்து  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து எழுத்து 25-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தங்கள் மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் தீர்ப்பளித்தனர்.

இதைத்தொடர்ந்து, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தான நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிமற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்,  வன்னியர்களுக்கான 10.5 சதவீத ஒதுக்கீடு ரத்து எதிர்த்து மேல்முறையீடு செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார்.