சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ளூர் வீரர்களுடன் இன்று பேட்மிண்டன் விளையாடிய துணை ஜனாதிபதி.
குடியரசு துணை தலைவர் வெங்காயா நாயுடு அவர்கள், தெலுங்கானாவில் இருந்து தனி விமானம் மூலம் ஒரு வார பயணமாக சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை, தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வெங்கையா நாயுடு அவர்கள், தனது மகளின் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்கான வருகை தந்துள்ளார். இந்நிலையில், இன்று வெங்கையா நாயுடு அவர்கள், சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ளூர் வீரர்களுடன் பேட்மிட்டன் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ளூர் வீரர்களுடன் இன்று பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node