CM Tweet:ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி இந்த ஆட்சியின் வெற்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்.

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி.ஈரோடு பாதையை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம் என்று கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.15 சுற்றுகளாக வாக்குகள்  எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் இருந்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10804 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகளை பெற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அருமைச் சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடைத்தேர்தல் களத்தைத் தனது இழிவான அரசியலுக்குப் பயன்படுத்தியது அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியை மறந்து, தன்னிலை இழந்து மிகமோசமான சொற்களைப் பயன்படுத்தி பரப்புரை செய்தார் பழனிசாமி.

• வேட்டி இருக்கிறதா – மீசை இருக்கிறதா – ஆண்மை இருக்கிறதா என்றெல்லாம் நாலாம்தர ஐந்தாம்தர  அ.தி.மு.க. பேச்சாளரைப் போல அவர் பேசினார்.

• நான்காண்டுகாலம் தனது கையில் பதவி இருந்தபோது மக்களுக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பழனிசாமி. அதனை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய்நீளம் காட்டினார். பதவியேற்ற நாள் முதல் தினந்தோறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து, ‘எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை” என்றார்.

பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போல பழனிசாமி | நினைத்தார். அவரது ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்பதை மீண்டும் ஒரு முறை அவருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

• இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், கழக முன்னணியினர், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

unknown node