சசிகலா வருகை !ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி வரவேற்க அனுமதி கோரி மனு

Visit Sasikala! Petition seeking permission to welcome flower sprinkling by helicopter

சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி  வரவேற்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா  ஓய்வு எடுத்து வருகிறார்.வரும் 8-ஆம் தேதி சசிகலா காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சசிகலா வருகையையொட்டி அமமுக அமைப்பு செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், சசிகலா வருகையையொட்டி வேலூர் மாவட்டம் மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில்  வரவேற்பு அளிக்க உள்ளேன்.அப்பொழுது காலை 11 மணி முதல் 1 மணி வரை தனியார் ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி வரவேற்பு அளிக்க அனுமதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சசிகலா வருகை !ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி வரவேற்க அனுமதி கோரி மனு