நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ட்வீட்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது.
இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. இதில் இருளர் பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இப்படம் குறித்து பல நேர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி நடிகர் சூர்யாவை தாக்கினாலோ, எட்டி உதைத்தாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பேட்டியளித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டர் பக்கத்தில், ‘westandwithsurya’ என்ற ஹேஸ்டேக்குகள் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘எளிய மக்களின் குரலாய் நின்றால் எதிரிகள் அலறுவார்களென்பதே உலக நியதி…. உம்மோடு நாங்கள் இருக்கிறோம்…’ என பதிவிட்டுள்ளார்.
unknown node