ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம் – சு.வெங்கடேசன் எம்.பி

இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது என ஆளுநரின் தேநீர் விருந்து குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது என ஆளுநரின் தேநீர் விருந்து குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ் நாடு மக்களின் கோரிக்கைகளையும், மாநில அரசின் குரலையும் நிராகரிக்கும், தமிழக ஆளுநரின் தேனீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர்  பக்கத்தில்,’இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது. தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறுத்திவைத்து, தமிழக மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node