நாளை பிரதமரை சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ...!

West Bengal Chief Minister Mamata Banerjee will meet Prime Minister Narendra Modi tomorrow.

நாளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 4 நாள் சுற்றுப்பயணமாக நாளை டெல்லி செல்ல உள்ளார். இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் இது தொடர்பாக மம்தா பானர்ஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர், பாஜக ஆட்சியில் ஜனநாயகம் எலும்புக்கூடாக உள்ளதாக கூறியுள்ளார்.

மாநிலங்களின் முயற்சியை மத்திய அரசு கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும், 4 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளேன் அப்பொழுது பிரதமர் மோடியை சந்திப்பேன். மாநில பிரச்சனை தொடர்பாகவும், திரிபுரா வன்முறை உள்ளிட்ட சில பிரச்சனைகள் குறித்தும் பிரதமரிடம் பேசுவேன் எனவும் கூறியுள்ளார்.