மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்..! வாக்குச் சாவடி சேதம்..வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைப்பு..!

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

ballotpapersfire

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஜூன் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. வேட்புமனுத் தாக்கலின் போது மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வந்தது.

இந்நிலையில், ஜூலை 8ம் தேதியான இன்று ஒரே கட்டமாக பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே கூச் பெஹார் மாவட்டதின், சீதாயில் உள்ள பாரவிடா தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி சேதப்படுத்தப்பட்டு, வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக வெளியான வீடியோவில், பள்ளியில் உள்ள நாற்காலிகள் மற்றும் மேஜைகள் உடைந்த நிலையில் புகை நிறைந்த அறைக்குள் சிதறிக் கிடப்பது தெரிகிறது. மேலும், இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஆனது ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node