ஆளுநர் மதிக்கிற மாதிரி என்ன பண்ணிருக்காரு – சீமான்

Seeman said that if the governor behaves in a way that respects him, he will respect him.

Hero Image

ஆளுநர் மதிக்கிற மாதிரி நடந்து கொண்டால் தான் மதிப்பார்கள் என சீமான் பேட்டி.

பரமக்குடியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், ஆளுநர் மதிக்கிற மாதிரி நடந்து கொண்டால் தான் மதிப்பார்கள், ஆனால் அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. சனாதன கோட்பாட்டுக்கு உச்சநட்சத்திரமே வள்ளலார் தான் என பேசுகிறார். இது சராசரி மனநிலையில் உள்ளவர்கள் பேசும் பேச்சா இது? வள்ளலாரை சனாதன கோட்பாட்டிற்கு ஏதிரானவர்.

அப்படிப்பட்டவரை தவறாக பேசும் போது, இது ரொம்ப முத்திருச்சு,இதுக்கு மேல இதுக்கு என்ன வைத்தியம் பண்ணினாலும் இப்படி தான் இருக்கும்னு தெரிஞ்சி போச்சி. இப்படி பேசினால் எப்படி மதிப்பார்கள். ஆளுநர் ஆளுநரின் வேலையை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.