பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டுவர காரணம் என்ன? என்பது குறித்து முதல்வர் விளக்கம்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக இன்று வேலூர் சென்றார். அங்கு பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் 5,351 புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
unknown nodeஇந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டுவர காரணம் என்ன? என்பது குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், நான் சில சமயங்களில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்ததாக மாணவர்கள் உருக்கமாக கூறுவதுண்டு. இதனால் தான், மதிய உணவு திட்டத்தை போல காலை உணவு திட்டமும் கொண்டுவரப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சில பள்ளிகளில் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் இருந்து பாடம் கற்பதை பார்த்துள்ளேன். மாணவர்களின் இந்த சிரமங்களை தவிர்க்கும் வண்ணம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.