தேமுதிக எங்கு இருக்குமோ அங்குதான் வெற்றி இருக்கும் – பிரேமலதா

Desiya Murpokku Dravida Kazhagam Premalatha Vijayakanth has said what those who celebrate MGR’s rights have done for him.

எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள்  என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சார்பாக சென்னை மதுரவாயிலில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர்  பிரேமலதா கலந்து கொண்டு மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா பேசுகையில்,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எங்கு இருக்குமோ அங்குதான் வெற்றி இருக்கும்.

எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தொண்டர்கள் தான் கேப்டனை கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைத்தார்கள் .விஜயகாந்த் தன்னை ஒரு போதும் எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொள்ளவில்லை.விஜயகாந்த் தான் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டு தோறும் உதவித்தொகை அளித்து வருகிறார்.எம்.ஜி.ஆரை குருவாக ஏற்றுக்கொண்டவர் விஜயகாந்த் தான் என்று தெரிவித்தார்.