யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள்? – அமைச்சர் துரைமுருகன்

பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆளுநர் செயல்பாடுகள் குறித்த தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்.

அமைச்சர் துரைமுருகன் பேச்சு

இந்த தீர்மானம் குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநருக்கு எதிராக கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் தீர்மானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கணத்த இதயத்தோடு தான் முதலமைச்சர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். மாநில அரசை ஆட்டிபடைக்க ஒரு ஏஜென்ட் தேவை என்பதால் ஆளுநர் பதவியை உருவாக்கியது மத்திய அரசு.

முதலமைச்சர் சரியான நேரத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். நாகரிகத்தோடு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் வாக்கியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் எல்லாம் குழப்பத்திற்கு காரணம் ஆளுநர் தான்.

ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்படுவதை அறிந்தே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் நல்லவர்கள் ஆகிவிட்டனர். சட்டப்பேரவை விதிகளை திருத்த கற்றுத்தந்ததே அதிமுக தான். ஆட்சிக்கு வருவோமா என தெரியாத காலத்திலேயே, ஆளுநர் பதவி தேவையில்லை என கூறிய கட்சி திமுக. பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னாரெட்டி தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது ஒரு முறை பாண்டிச்சேரியில் இருந்து அவர் திரும்பி கொண்டிருந்தபோது அவரை அவமதிக்கும் வகையில் அவர் மீது கற்களை வீசி எறிந்தது போல நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் கண்ணியமானவர்கள்.

ஆளுநர் மாளிகையில் ஒளிரபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா?, யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள்? பாஜகவாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள் என விமர்சித்துள்ளார்.