இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பா..? – முதல்வர் ஆலோசனை..!

The Chief Minister is scheduled to hold consultations with the authorities this morning regarding the implementation of the next phase of curfew in Tamil Nadu.

தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக இன்று காலை அதிகாரிகரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை உயர் அதிகாரிகரிகளுடன் தலைமைச் செயலகத்தில்  ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இதில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்  இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? என்பது தெரியவரும்.