மக்கள் சார்ந்த பிரச்னை என்பதால் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியது எந்த தவறும் இல்லை என சசிகலா பேட்டி.
நாகையில் வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் முக்கியமான காரணம் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
ஓபிஎஸ் பேசியது எந்த தவறும் இல்லை
தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவருக்கும் பேச உரிமை உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்னை என்பதால் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியது எந்த தவறும் இல்லை. அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒன்றிணைத்து தலைமை ஏற்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, இதனை அதிமுக தொண்டர்களிடம் கேட்டால் சரியான பதிலை கூறுவார்கள் என்று கூறினார்.