நவம்பர் 29 – ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

The winter parliamentary session begins on November 29.

குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 29 – ஆம் தேதி தொடங்குகிறது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து முடிவெடுப்பதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி இந்த மாதம் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ளக்கூடிய எம்பிக்கள் உட்பட அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும், கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.