மக்கள் மனங்களில் குடியிருக்கும் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது – ஜோதிமணி எம்.பி

மக்கள் மனங்களில் குடியிருக்கும் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.

jothimani

மக்கள் மனங்களில் குடியிருக்கும் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.

ராகுல் காந்தி அவர்கள், அரியானா வழியாக இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அரியானா மாநிலம் சோனிபத்தில் மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின் அவர், விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்தார். பின் விவசாய பணிக்கு பயன்படும் வகையில் டிராக்டரையும் வயலில் ஓட்டினார்.

இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகள்,விவசாய கூலித்தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி. நீங்கள் அவரது பதவியைப் பறிக்கலாம் . அரசு வீட்டைக் காலி செய்து வெளியே அனுப்பலாம். ஆனால் மக்கள் மனங்களில் குடியிருக்கும் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.’ என  பதிவிட்டுள்ளார்.

unknown node