உங்கள் கூற்று சாப்பாடு பற்றியதல்ல...! சனாதனம் பற்றியது அமைச்சரே..! – சு.வெங்கடேசன் எம்.பி

இது ஆச்சாரத்தின் பால்நின்று வெளிப்படுத்தும் அடையாளம் என நிர்மலா சீதாராமன் பேச்சு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

இது ஆச்சாரத்தின் பால்நின்று வெளிப்படுத்தும் அடையாளம் என நிர்மலா சீதாராமன் பேச்சு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நாடாளுமன்றத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைபடுகின்றனர். பொருளாதாரம் வளர்ந்து வருவது எதிர்க்கட்சியினருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை கண்டு பெருமைப்படாமல் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றனர் என்றும், நான் ‘வெங்காயம்’ சாப்பிட மாட்டேன். ஆனால் வெங்காயம் சாப்பிடுபவர்களின் பிரச்சனைகளுக்காகவும் பேசுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,நான்வெங்காயம்சாப்பிடமாட்டேன்.ஆனால்வெங்காயம்சாப்பிடுபவர்களின்பிரச்சனைகளுக்காகவும்பேசுகிறேன்என்று மக்களவையில் நிர்மலா சீத்தாராமன் கூறினார். இது ஆச்சாரத்தின் பால்நின்று வெளிப்படுத்தும் அடையாளம். உங்கள் கூற்று சாப்பாடு பற்றியதல்ல. சனாதனம் பற்றியது அமைச்சரே.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node