தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஒடிசா அருகே 1000கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது […]
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அங்கங்கே மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்து வந்தபோது பெய்த இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில் மீண்டும் , வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அங்கங்கே […]
தமிழ்நாட்டில், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலோர கர்நாடக மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காணப்படுகின்ற வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.தற்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்த நிலையிலும், கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும் போதும் அவ்வப்போது […]
இந்தியாவின் தலைநகரான டெல்லி உட்பட பல மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. தொடர்ந்து மேலும் பனிமூட்டம் அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களான ஜம்மு,காஷ்மீர் ,இமாச்சலப் பிரதேசம்,பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.இதன் எதிரொலியாக ரயில், மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டத்தால், ரயில்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு ரயில்களின் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தை பொறுத்து கொள்ளுமாறு பயணிகளை ரயில்வே துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த பனி […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சூறைகாற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த அளவை விட அதிகமாகவே மழை பொழிவானது இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.தற்போது குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையில் அவ்வபோது மழை பொழிவும் ஏற்படுகிறது.இந்நிலையில் தற்போது இது குறித்த தகவலை வானிலை ஆய்வு மையல் தெரிவித்துள்ளது.அதில்தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
தமிழகத்தில் பருவமழையை தொடர்ந்து சில நாட்களாக அநேக இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, சுற்றுவட்டாரபகுதிகளிலும், தேனி மாவட்டத்திலில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளிலும், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், திட்டக்குடி,நெய்வேலி பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்திலும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வெப்பசலனம் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழை பெய்யும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்றமாதம் தொடங்கி பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனை அடுத்து வங்க கடல் மற்றும் அரபி கடலில் 3 விதமான புயல்கள் உருவாகின. அவை மற்ற இடங்களுக்கு நகர்ந்து சென்றதால் மழையளவு குறைவாக இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் மிதமான மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து வெப்ப சலனம் காரணமாக வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய […]
பருவமழை பெய்து முடிந்த வந்த நிலையில், தற்போது மழையளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புல் புல் புயலானது தற்போது அதிதீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டிருப்பதால் மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் மற்கும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாளைக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனை அடுத்து ராமநாதபுரம்,நெல்லை,தேனி,மதுரை, […]
அரபிக்கடலில் மஹா புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கையில், அரபிக்கடலில் மையம் கொண்ட புயல், காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நமக்கல், திருப்பூர், தேனி, நீலகிரி, கோவை திண்டுக்கல் என மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், இதில் அநேக இடங்களில் கனமழை பெய்ய உள்ளது. மேலும் அரபி கடலோரம் […]
தமிழகத்தில் அநேக இடங்களில் தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது அரபி கடலில் மஹா புயல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வடமாநிலங்களில் மழை அளவு குறையும் எனவும், அரபி அக்கடலில் மஹா புயல் தீவிரமடைந்ததன் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடல் காற்று 110 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை வானிலை மைய பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மற்றும் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் அடுத்த மூன்று நாட்கள் அதாவுது 19, 20, 21 ம் தேதிகளில் கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
சென்னை வனிலை மைய பாலசந்திரன் அவர்கள் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவித்துள்ளார். தமிழக, புதுவையில் கனமழை பெய்யும் என்றுள்ளார். அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெறிவித்துள்ளார். அத்தோடு கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 13 சென்டிமீட்டர் மழையும், திண்டுக்கல் […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி உயிர் பலி எண்ணிக்கை 70தாக உயர்ந்துள்ளதாக தெறிவித்துள்ளன இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் புயலின் பாதிப்பில் […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருவதால் வடகிழக்கு பருவமழை வரும் அக்,17ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதில் கோத்தகிரி (நீலகிரி ), சத்தியமங்கலம் (ஈரோடு) ஆகிய இடங்களில் 4 செ.மீ மழையும், கிருஷ்னகிரி மாவட்டம் தளி மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் ( ஈரோடு மாவட்டம்) 3 செ.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் தமிழகத்தில் தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் இருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளம் காரணமாகவும் சுவர்கள் இடிந்தும் 9 சிறுவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெறிவித்துள்ளனர். உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் முதல்வர் தேவேந்திர தனது இரங்கலை தெறிவித்துள்ளார். புனேவில் உள்ள […]
தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இன்னும் அடுத்த 24 மணிநேரத்திற்கு, கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், மேலும் மதுரை, கடலூர், திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நேற்று திடீரென, வேலூர், ஆம்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று திடீரென அதிக மழை பெய்தது. புதுச்சேரி நகரம் மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நேற்று மழை பெய்தது.
சென்னையில் நேற்று இரவு, இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் அண்ணா சாலை, நந்தம்பாக்கம், கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம் என சென்னையில் பல்வேறு பகுதியில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மிதமான மழையானது இன்று பிற்பகல் வரை தொடரும் எனவும், மேலும், இன்னும் ஓரிரு நாட்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.