வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதில் கோத்தகிரி (நீலகிரி ), சத்தியமங்கலம் (ஈரோடு) ஆகிய

தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதில் கோத்தகிரி (நீலகிரி ), சத்தியமங்கலம் (ஈரோடு) ஆகிய இடங்களில் 4 செ.மீ மழையும், கிருஷ்னகிரி மாவட்டம் தளி மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் ( ஈரோடு மாவட்டம்)  3 செ.மீ மழையும் பெய்துள்ளது.மேலும் தமிழகத்தில் தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.