2023 ஹாக்கி உலகக்கோப்பையை முன்னிட்டு ரயில்வே துறை, 2 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
இந்திய ரயில்வே துறை, ஒடிசாவில் நடக்கும் ஹாக்கி 2023 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, பிரத்யேகமாக இரண்டு புதிய “ஹாக்கி சிறப்பு” ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரி 13 முதல் ஜனவரி 29 வரை, உலகக்கோப்பை போட்டிகள், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் மற்றும் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டே ஹோக்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, இரண்டு ரயில்களுக்கான வழித்தடங்களாக, முதல் ரயில் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா இடையே இயக்கப்படும் என்றும், இரண்டாவது ரயில் பூரி மற்றும் ரூர்கேலா இடையே இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள் ஜனவரி 31ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.