actor suriya [File Image]
ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெறவுள்ளது. ISPLT10 கிரிக்கெட் என்றால் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆகும். 10 ஓவர்கள் வைத்து நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ISPLT10 கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது, இதில், மும்பை அணியை பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் வாங்கி இருந்தார். அவரை தொடர்ந்து ஹைதராபாத் அணியை நடிகர் ராம்சரண் வாங்கி இருந்தார்.
முகமது ஷமி இல்லாதது பெரிய பின்னடைவு -அலன் டொனால்ட் பேச்சு!
இப்படி முன்னணி நடிகர்கள் ஒவ்வொரு அணியை வாங்கி வரும் நிலையில், தமிழ்நாடு சார்பில் விளையாடவுள்ள சென்னை கிரிக்கெட் அணியை நடிகர் சூர்யா வாங்கி உள்ளார். இதனை அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தும் இருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” வணக்கம் சென்னை! ‘ISPLT10’- இல் எங்கள் சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என அறிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக விளையாட ஆர்வம் உள்ளவர்கள் சூர்யா கொடுத்துள்ள அந்த லிங்கிற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…