,

இந்திய சீரியலை பார்த்து மகள் “ஆரத்தி” எடுத்ததால் தொலைக்காட்சியை உடைத்த அஃப்ரிடி.!

By

  • அஃப்ரிடி தன் மனைவியிடம் சீரியலில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பலமுறை கூறி உள்ளார்.
  • அதையும் மீறி அஃப்ரிடி மகள் சீரியல் பார்த்து அந்த சீரியலில் காட்டுவது போல  சில பாவனை செய்ததால் கோபமடைந்து தொலைக்காட்சியை உடைத்ததாக கூறினார்.

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அஃப்ரிடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து தொகுப்பாளினி “நீங்கள் எப்போதாவது தொலைக்காட்சியை உடைத்தது உண்டா” என கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அஃப்ரிடி என் மனைவியால் ஒருமுறை டிவியை உடைத்து இருக்கிறேன் என கூறினார். அது ஏனென்றால் ஸ்டார் பிளஸ் சேனல் வெளியாகும் சீரியல்களை இங்கு உள்ள பலர் பார்ப்பதுண்டு அவர்களில் எனது மனைவியும் ஒருவர்.

அதில் வெளியாகும் சீரியலை என் மனைவிடம் தனியாக பார்க்குமாறு கூறினேன். இந்த சீரியலில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று அவரிடம் பலமுறை கூறி இருந்தேன்.ஆனால் அவர் அதை மீறி குழந்தையையும் ஈடுபடுத்தி உள்ளார்.

இதனால் எங்கள் மகள் அந்த சீரியலில் ஆரத்தி காட்டுவது போல  சில பாவனை செய்தாள் அதனால் கோபமடைந்து தொலைக்காட்சியை உடைத்து விட்டேன் என கூறினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Dinasuvadu Media @2023