ஆசிய தடகள சாம்பியன்ஷிப்..! தமிழக வீரர் சந்தோஷ் வெண்கல பதக்கம் வென்று சாதனை..!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
25 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் இந்தியா 5 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெங்கல பதக்கங்களை வென்று மொத்தமாக 9 பதக்கங்களை கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் 400 மீட்டர் என்ற இலக்கை 49.09 வினாடிகளில் கடந்துள்ளார். இது இந்தியாவிற்கு 10-வது பதக்கம் ஆகும். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025