AsianGames2023: பெண்களுக்கான 400 மீ தடை ஓட்டம்.! தமிழ்நாடு வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தல்.!

Published by
செந்தில்குமார்

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா பல வெற்றி பதங்கங்களைக் குவித்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒலுவாகேமி முஜிதாத் 54.45 வினாடிகளில் இலக்கை அடைந்து முதல் இடம் வென்றார். சீனாவின் ஜியாடி 55.01 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாம் இடம் பிடித்தார்.

இதனால், பஹ்ரைனின் முஜிதாத் தங்கப்பதக்கமும், சீனாவின் ஜியாடி வெள்ளிப்பதக்கமும், இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மறுபுறம், ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டும் இறுதிப் போட்டியில் இந்தியாவின் யஷாஸ் பலாக்ஷா மற்றும் டி சந்தோஷ் குமார் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், 50.68 வினாடிகளில் இலக்கைக் கடந்து அமெரிக்காவின் மெக்லாக்லின் உலக சாதனை படைத்தார். மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை விளையாடி விளையாட்டுகளில் இந்தியா 63 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 13 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில்  4வது இடத்தில் உள்ளது. இதே போல சீனா 156 தங்கம், 85 வெள்ளி, 43 வெண்கலம் என 284 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கடைசி வரை திக்..திக்.. குஜராத்துக்கு குட் பை! த்ரில் வெற்றிபெற்ற மும்பை!

நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…

4 hours ago

ஐயோ என்னங்க இதெல்லாம்? நடிகையின் குளியல் நீரில் சோப்…விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…

6 hours ago

என்னா அடி! குஜராத்தை குமுற வைத்த மும்பை….வெற்றிக்கு வைத்த பிரமாண்ட டார்கெட்!

நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…

7 hours ago

திருநெல்வேலி, கோவை …நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…

7 hours ago

மாறியது பாமக அலுவலக முகவரி…அன்புமணி ராமதாஸ் அதிரடி!

சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…

8 hours ago

வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி :  திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…

9 hours ago