AUSvIND 2 ஆம் டெஸ்டில் களமிறங்கவுள்ள கில்.. ஆடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ!

Team India for 2nd Test of the Border-Gavaskar Trophy against Australia to be played in MCG from tomorrow announced.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அதிரடியாக கைப்பற்றியது. இதில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாம் ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா அணி, ஆறுதல் வெற்றிபெற்றது.

அதனைதொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு முன்னணி வீரர்கள் உட்பட பலரும் விமர்சித்து வந்த நிலையில், அடுத்தடுத்து நடக்கும் டெஸ்ட் போட்டியில் தீவிரமாக ஆடும் நோக்குடன் இந்திய அணி தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றது.

இந்தநிலையில், நாளை தொடங்கவுள்ள இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த நடைபெறும் டெஸ்ட் தொடரில் ரஹானே கேப்டனாகவும், வைஸ் கேப்டனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் சுப்மன் கில்-க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

unknown node

ஆடும் வீரர்கள்:

அஜிங்க்ய ரஹானே, மயங்க  அகர்வால், சுப்மன் கில், புஜாரா, ஹனுமன் விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, முஹமது சிராஜ்.