2-வது டெஸ்ட் போட்டி...நாளை முதல் டிக்கெட் விற்பனை..!

Tickets go on sale tomorrow to watch the 2nd Test between India and England.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியை காண நாளை முதல் டிக்கெட் விற்பனை.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. தற்போது முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. அதில், கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளையும் காண 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அறிவித்தது.இதைத்தொடர்ந்து, தமிழக அரசு கிரிக்கெட் போட்டிகளை காண மைதானத்தில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியது.

unknown node

இந்நிலையில், வருகின்ற 13-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, 2-வது டெஸ்ட் போட்டியை காண நாளை முதல் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட் விற்பனை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேரடி டிக்கெட் விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாகwww.paytm.com,www.insider.inஆகியவை மூலம் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானத்த்திற்கு வரும் ரசிகர்கள் கட்டாயம் மாஸ்க் அணிவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலை குறைந்த பட்சம் ரூ.100 முதலும் அதிகபட்சமாக ரூ.200 வரை விற்கப்படுகிறது.