இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி தரம்சாலாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மைதானம் இன்னும் முழுமையாக தயார் செய்யப்படாததால் இந்தூர் மைதானத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
தரம்சாலா மைதானத்தின் வடிகால் பணிகளுக்காக புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் மைதானம் சர்வதேச போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மைதானம் இன்னும் முழுதாக தயார் ஆகவில்லை என பிசிசிஐ தரப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்ற நிலையில் தரம்சாலா மைதானத்திலிருந்து போட்டி, இந்தூர் மைதானத்திற்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
unknown node