பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி, டி-20 கிரிக்கெட்டில் முதல் ஓவரில் 4 விக்கெட்கள் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடத்தப்படும் விட்டலிட்டி ப்ளாஸ்ட் டி-20 தொடரில் நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக விளையாடிய பாகிஸ்தானைச்சேர்ந்த ஷாஹீன் அப்ரிடி, பர்மிங்காம் பேர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஒவரிலேயே 4 விக்கெட்கள் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இருந்தும் ஷாஹீன் இதில் ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்டார்.
unknown nodeஇதன்மூலம் டி-20 கிரிக்கெட்டில் முதல் ஓவரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற சாதனையை ஷாஹீன் அப்ரிடி படைத்துள்ளார். இந்த போட்டியில் ஷாஹீன் அப்ரிடி, 4 ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் நாட்டிங்ஹாம்ஷயர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
