விராட் கோலியின் 500ஆவது போட்டியான நேற்று தொடங்கிய டெஸ்டில், முதல் வீரராக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் டெஸ்டில் வென்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கியது. இந்த போட்டி விராட் கோலிக்கு 500-வது சர்வதேச போட்டியாகும்.
இந்திய அளவில் 4 வது வீரராக கோலி இந்த சாதனையை நேற்று படைத்தார், சச்சின், எம்.எஸ்.தோனி மற்றும் டிராவிட் ஆகியோருக்கு பிறகு விராட் கோலி நேற்று 500-வது போட்டியில் விளையாடினார். மேலும் இந்த போட்டியில் விராட் கோலி அரைசதமடித்து(87* ரன்கள்) விளையாடி வருகிறார். 500 ஆவது போட்டியில் அரைசதமடிக்கும் முதல் வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சர்வதேச அளவில் சச்சின், ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா, ஜெயசூர்யா, ரிக்கி பாண்டிங், எம்.எஸ். தோனி, அப்ரிடி, காலிஸ், ராகுல் டிராவிட் ஆகியோர் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், விராட் கோலி மட்டுமே இந்த பட்டியலில் அரைசதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும் அவர் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் 87* ரன்களுடன் களத்தில் இருப்பதால் சதமடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது, இதனால் மேலும் ஒரு புதிய சாதனையும் படைக்க விராட் கோலி காத்துக்கொண்டிருக்கிறார்.
