டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. டெல்லி அணி ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பு டெல்லிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி அணி ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, தற்போது அக்சர்படேல் தனிமைப்படுத்தப்பட்டார். டெல்லி அணியின் மருத்துவக் குழு ஆக்சருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர் விரைவாக குணமடைய விரும்புகிறோம் என டெல்லி அணி தெரிவித்துள்ளது.
unknown nodeடெல்லி அணியில் தற்போது வேறு எந்த வீரரும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ரானாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.