“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக், சக்ரவர்த்தி ஐசிசி டி20 தரவரிசையில் முன்னேற்றம் சந்தித்துள்ளனர்.

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். குறிப்பாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.
அவரைப்போல, சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மொத்தமாக இந்த டி20 தொடரில் 14 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு பக்க பலமாக செயல்பட்டார். இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெல்வதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தவர்களில் வருண் சக்கரவர்த்தியும் ஒருவர். இருவரும் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் டி20 தரவரிசைப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து தன்னுடைய டி20 வாழ்க்கையில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்த அபிஷேக் சர்மா ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி, 40வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு உயர்ந்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் இருக்கிறார். அவரை போல, வருண் சக்ரவர்த்தி 14 விக்கெட்கள் எடுத்து அசத்தியதன் மூலம் ஐசிசி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி, 5வது இடத்துக்கு உயர்ந்தார்.
மேலும், புனேவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் எடுத்த ஹாரி புரூக் மூன்று இடங்கள் முன்னேறி 42வது இடத்தைப் பிடித்துள்ளார். அதைப்போல, ஹார்திக் பாண்ட்யா (ஐந்து இடங்கள் முன்னேறி 51வது இடம்), ரிங்கு சிங் (ஐந்து இடங்கள் முன்னேறி 55வது இடம்), சிவம் துபே (38 இடங்கள் முன்னேறி 58வது இடம்) பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025